அஞ்சறைப்பெட்டி

Download more awesome themes for your blogger platform #templatetrackers Follow us @ Google+ and get weekly updates of new templates we release regularly



சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது, உற்று கவனித்தேன்..!

இலைக்கு வெளியே இரண்டு சோற்றுப்
பருக்கைகள் இறைந்து கிடந்தன, அவைதாம்
அழுதுகொண்டிருந் தன."எதுக்கு இப்படி அழறீங்க" என்று கேட்டேன்?.

அதில் ஒன்று கண்ணீரோடு தன் கதையைச் சொன்னது.

"ஒரு ஏழை விவசாயி...
கடனை உடனை வாங்கி விதை நெல் போட்டு, வயலை உழுது,
நாற்று நட்டு, களை பறித்து,பயிர் செய்து,
நீர் பாய்ச்சி ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை வளர வைத்தார்..

நாங்களும் நல்லா வளர்ந்தோம், என்னோட சகோதர மணிகளில்
சிலரை எலிகள் நாசம் செய்தன..

பறவைகள் கொத்தித் தின்றன.. தப்பிப்
பிழைத்த நாங்கள் அறுவடைக்குத்
தயாரானோம்.

அறுத்து, களத்துக்கு கொண்டு வந்து,
தூற்றி அதிலும் வீணாகிப்போன
சகோதரமணிகள் தவிர்த்து பெரிய பெரிய
பைகளில் எங்களை அடைத்து வைத்தார்கள்.

அப்புறம் நெல் மணிகளிலிருந்து உமி நீக்கி எங்களை அரிசியாக்கும் போது காணாமல் போன சகோதரமணிகள்
நிறைய பேர்.

விற்பனைக்கு கடையில் வைத்திருக்கும்
போது மூட்டைகளில் விழுந்த ஓட்டைகளில் சிலரும்,
எடை போட்ட போது கொஞ்சம் பேரும் வீட்டுக்கு நீங்கள்
வாங்கி வந்த போது,

அரிசி களைந்து சமைக்கும்
போது என்று எல்லாவற்றிலும் தப்பிப்
பிழைத்து உங்களுக்கு உணவாகி உங்கள்
தட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

இத்தனை பேர் உழைப்பில் விளைந்த
என்னை.. பல இடர்ப்பாடுகளை கடந்து வந்த என்னை..
இப்படி வீணாக்கினால் அழாமல் என்ன
செய்ய?" என்றது.

உணவை வீணாக்காதீர்கள், தேவையில்லாத உணவுகளை வீனடிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு கொடுங்கள் அது கூட இல்லாமல் சிலர் இருக்கின்றனர்..

விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..!



பொதுவாகவே ஆண்களை விட பெண்களின் செயல் திறன் பல வேலைகளில் சிறப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் ஆற்றலும், பல மொழி பேசும் ஆற்றலும் பெண்களுக்கு அதிகமாக இருக்கக் காரணம் அவர்களது மூளை தான் என்கிறது ஆய்வுகள்.

அதாவது, ஆணின் மூளையில் இருந்து பெண்ணின் மூளை வேறுபட்டு உள்ளது என்பது பல்வேறு எம்ஆர்ஐ ஸ்கேன்களின் ஆய்வு மூலமாக வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.

அதாவது, மூளையின் முன் பகுதியில் இருந்து பின் பகுதியை இணைக்கும் நரம்புகளை அதிகமாகவும், பலமாகவும் கொண்டதாக ஆண்களின் மூளை உள்ளது. அதே சமயம், பெண்களின் மூளையில் வலது மூளையில் இருந்து இடது புற மூளையை இணைத்த வகையில் நரம்புகள் பின்னப்பட்டு உள்ளன. இவையே, ஒரு வேலையை ஆண் செய்யும் விதத்துக்கும், பெண் செய்யும் விதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்கிறது மருத்துவம்.

அதாவது, ஒரு வேலையை எடுத்து செய்யும் போதும், அதில் முழு கவனம் செலுத்தும் போதும் ஆண்களின் மூளை சிறப்பாகவே செயல்படுகிறது. ஆனால், ஒரே சமயத்தில் இரு வேறு வேலைகளை அவர்களால் திறம்பட செய்ய முடியாது. அதே சமயம், பெண்களால் ஒரு வேளையை மிகவும் திறமையாகவும், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை எளிதாகவும் செய்ய முடியும். பொதுவாக பெண்கள் போனில் பேசிக் கொண்டே சமைப்பது, டிவி பார்ப்பது, வீட்டு வேலைகள் செய்வது போன்றவற்றை செய்வதை பார்த்திருப்போம்.

இது மட்டும் அல்ல வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டு பணிக்கும் செல்லும் ஆற்றல் பெண்களுக்கு அதிகம் உள்ளது.

மூளை வேறுபாட்டினால் உள்ள சில இயல்பான குண நலன்களை பார்த்தால், வரைபடத்தைப் பார்த்தே ஒரு ஆணால், செல்லுமிடத்தை கண்டுபிடிக்க முடியும். ஆனால், அதற்கெல்லாம் நேரத்தை செலவிடாமல், மற்றவர்களிடம் முகவரி கேட்டு அதை புரிந்து செல்லும் குணம் பெண்களுக்கு இருக்கும்.

வெகு நாட்களுக்கு முன்பு சந்தித்த ஒருவரை நினைவு படுத்தும் ஆற்றல் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருப்பதாகவும், ஒரு வாகனத்தை மிகக் குறைந்த இட வசதி இருக்கும் இடத்திலும் லாவகமாக நிறுத்தும் முறை பெண்களுக்கு எளிதானது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த மூளையில் இருக்கும் வேறுபாடு பிறக்கும் போது அமைவதில்லை. சுமார் 15 வயதுக்கு மேல்தான் இந்த வேறுபாடு ஏற்படுவதாகவும், இளம் வயதை அடையும் ஆண் மற்றும் பெண்ணின் மூளையில் இந்த வேறுபாட்டை எளிதாக காணலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதே காரணத்தால் தான், 3 வயது ஆண் குழந்தையை விட, பெண் குழந்தைகள் எளிதாக பல வார்த்தைகளை பேசுவதற்கும் காரணம் என்று தோன்றுகிறது.



பெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். திருமணம் செய்யும் போது, பெண்ணை விட ஆணின் வயது சற்று அதிகமாக இருந்தால், நிறைய நன்மைகள் உள்ளன.

அதே சமயம் தீமைகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் பொருந்தும். தன்னை விட பெரிய ஆண்களை திருமணம் செய்து கொண்டால், ஏதேனும் கஷ்டமான பிரச்சனையின் போது சரியாக முடிவெடுக்கத் தெரியவில்லையென்றால், அத்தகையவரை திருமணம் செய்து கொள்ளும் போது, ஈஸியாக சரிசெய்து விடலாம்.

எத்தகைய பிரச்சனைக்கு எப்படி நடக்க வேண்டும் என்று நன்கு தெரியும். ஆகவே இந்த வாழ்க்கைப் பாடத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையில் இருப்பார்கள்.

எனவே திருமணத்திற்குப் பின், வாழ்க்கையில் எந்த ஒரு பணப் பிரச்சனையும் இருக்காது. பின் எதிர்காலத்தில் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். வயது அதிகம் உள்ளவர்கள் எதையும் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, குறும்புத்தனமாக ஏதாவது ஒரு செயலை செய்தால், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டு, கடுமையாக நடப்பார்கள்.

அதே சமயம் அவர்கள் குறும்புத்தனம் என்று நினைத்து ஏதேனும் செயலைச் செய்வது, நமக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கும். வயது குறைவாக இருக்கும் பெண்கள் வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, ஆண்களும் ஒருவித நம்பிக்கையில்லாத கோபம் வரும்.

அது என்னவென்றால், வயது குறைவாக இருப்பதால், தன் மனைவி இளம் வயது ஆண்களுடன் நட்புறவுடன் பேசும் போது, கோபம் வந்து சண்டை போடுவார்கள். ஆகவே எதுவானாலும், சரியான புரிதல் இருந்தால், எந்த ஒரு வாழ்க்கையும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் சந்தோஷமாக செல்லும்





அனேகன்’ படத்தில் தனுஷ் நடிக்கும் நான்கு கெட்டப்புகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் தனுஷ் மாறுபட்ட நான்கு வேடங்களில் நடிக்கிறார், அந்த நான்கு கதாபாத்திரங்கள் என்னென்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது.

சுருட்டை முடியுடன் நவநாகரீக இளைஞனாக ஒரு கதாபாத்திரம் என்றால், புரூசிலியை போன்று மற்றொரு கதாபாத்திரம், மூன்றாவது கதாபாத்திரம், ’குட்டி’யை போன்ற க்யூட் கெட்டப்.

காசிமேடு பின்னணியில் வரும் நான்காவது சர்ப்ரைஸ் கதாபாத்திரம் தான் இந்தப்படத்திற்கு ஹைலைட்டாம்.

ஆக மொத்தத்தில் மாறுபட்ட ஒரு படத்தை தர இருக்கிறார் கே.வி.ஆனந்த்.



இப்போதும் தெலுங்கில் முன்னணி நடிகை போட்டியில் இருக்கும் ஸ்ருதிஹாசன் ‘டி டே’ என்ற பாலிவுட் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் ரிலீஸ் செய்யப் திட்டமிட்டுள்ள நிலையில் .

தன்னுடைய அனுமதி இல்லாமல் இப்படம் வெளியாகிறது என்றும், அது தன்னுடன் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக ஸ்ருதி தெரிவித்துள்ளா.

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் ‘டி டே’. இதில் பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகள் மும்பை ரசிகர்களை அதிர வைத்தது.

 இப்படத்தை நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார். தற்பொழுது இப்படத்தை தமிழில் ‘தாவூத்’ என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது. பிரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் இதனை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

 தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி 150 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச பயங்கரவாதி ஒருவனை இந்தியாவின் முக்கியமான ‘ரா’ அதிகாரி தனது டீமுடன் சென்று கைது செய்யும் ஆக்ஷன் கதையில் பாலியல் தொழிலாளியாக சவாலான வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.

ஆனால் இப்படம் தமிழில் வெளியாவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் இப்படம் வெளியாகிறது என்றும், அது தன்னுடன் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

 இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விவரங்கள் தயாரானவுடன் அது ஊடகங்களில் வெளியிடப்படும் என அவர் கூறினார்.


 பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் படத்திற்கு 'இது நம்ம ஆளு' என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வந்தது. சிம்புவிற்கு ஜோடி யார் என்பது குறித்து பெரிய விவாதம நடைபெற்று வந்தது.

நயன்தாரா தான் நாயகி என்று ட்விட்டர் தளத்தில் இயக்குநர் பாண்டிராஜ் அறிவிக்க, அன்று முதல் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு எகிறியது.

சிம்பு - நயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தன. படப்பிடிப்பு தளத்தில் இருவருமே நண்பர்களாகவே வலம் வந்து இருக்கிறார்கள். தங்களுக்குள் எதுவுமே நடக்காதது போல் இருவருமே நடந்து கொண்டதை படக்குழு ஆச்சர்யத்தோடு பார்த்தது.

சிம்புவுக்கு லவ் ஃபெயிலியர். அவருக்கு வீட்டுல பார்த்த பொண்ணு தான் நயன்தாரா. நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்காக அஞ்சு, ஆறு மாசம் காத்திருக்காங்க. அப்போ ரெண்டு பேருக்கும் இடையில் பூக்கும் காதல் தான் கதை. காதல் தரும் எதிர்பார்ப்புகள், அதன் பிறகான ஏமாற்றங்கள், அது உண்டாக்கும் பிரச்னைகள்... இது தான் படத்தோட கதை.

இப்படத்தில் நயன்தாராவை நாயகி ஆக்குவதற்கு முன்பு, 'கதவைத் திற காதல் வரட்டும்’ அல்லது 'லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு’ தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து இருக்கிறார் பாண்டிராஜ். நயன்தாராவை நாயகி ஆனவுடன் தற்போது 'இது நம்ம ஆளு' வைக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். ஏனென்றால் படத்தில் நயன்தாராவைப் பார்க்கும் போது எல்லாம் 'இது நம்ம ஆளு சார்' என்று கூறிக்கொண்டே இருப்பாராம். அது தான் தலைப்பிற்கு காரணமாம்.

ஹன்சிகா அப்படினு ஒருத்தங்க இருக்காங்களா.....?


 சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம் ஃபேர் வென்ற தனுஷிற்கு, நடிகர் விஜய் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சிம்புவிற்கு தல என்றால், தனுஷிற்கு தளபதி என்ற பேச்சுகள் உறுதியாகி கொண்டே இருக்கிறது. ஜனவரி 4ம் தேதி விஜய், தனுஷ் இருவருமே சந்தித்து நீண்ட நேரம் பேசினார்கள்.

விஜய்யை சந்தித்து உரையாடித்தை தனுஷ் மிகுந்த சந்தோஷத்துடன்,"இளைய தளபதி விஜய்யை சந்தித்தேன். அவரோடு ஆடினேன், பாடினேன். நிறைய பேசினேன். லவ் யூ பிரதர்"என்று ட்விட்டர் தளத்தில் கூறினார். அதுமட்டுமன்றி விஜய்யோடு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற பிலிம் ஃபேர் விருதுகள் விழாவில், சிறந்த புதுமுக நடிகருக்கான விருது 'ராஞ்சனா' படத்திற்காக தனுஷிற்கு கிடைத்தது.

பிலிம் ஃபேர் வென்ற தனுஷிற்கு விஜய் தனது வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார். மலர் கொத்து ஒன்றை அனுப்பி வைத்து, தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.

விஜய்யின் இந்த பாசத்தைப் பார்த்து தனுஷ் மிகவும் நெகிழ்ந்து விட்டாராம்.


விண்வெளி வீரர்களுக்கு சுடச்சுட பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டரை அமெரிக்காவில் உள்ள இந்திய இன்ஜினியர் உருவாக்கியுள்ளார்.இந்த 3டி பிரின்டர் 30 ஆண்டு காலம் உழைக்கும் திறன் படைத்தது.

 விண்வெளியில் நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் போதும், இந்த இயந்திரம் உணவு தேவையை ஈடுகட்ட மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

விண்வெளி பயணம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு பலவிதமான பாக்கெட் உணவுகள் மற்றும் டின் உணவுகள், குளிர் பானங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இருந்தாலும் அவைகள் சரிவிகித ஊட்டச்சத்து உணவாக அமைவதில்லை. மேலும், விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி நீண்ட கால ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உணவுப் பொருட் களை விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது.

விண்வெளியிலேயே உணவு தயாரிக்கும் நவீன இயந்திரத்தை உருவாக்க அமெரிக்காவின் நாசா மையம் விரும்பியது.

இதற்காக நாசா விடுத்த டெண்டரை, அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள இந்திய மெக்கானிக்கல் இன்ஜினியர் அஞ்சன் என்பவர் நடந்தும் ‘சிஸ்டம்ஸ் அண்ட் மெட்ரியல்ஸ் ரிசர்ச் கார்பரேஷன்’ (எஸ்.எம்.ஆர்.சி) என்ற நிறுவனம் ஸி78 லட்சத்துக்கு கடந்த ஆண்டு பெற்றது.

விண்வெளியில் சுடச்சுட பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டரை, அஞ்சன் உருவாக்கியுள்ளார்.

இங்க் ஜெட் கலர் பிரின்டரில் இருக்கும் காட்ரிட்ஜ்கள் போல இந்த 3டி பிரின்டரில் இருக்கும் காட்ரிட்ஜ்களில் மைதா மாவு, தக்காளி பவுடர், சமையல் எண்ணெய், தண்ணீர், புரோட்டீன், மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ், ஸ்டார்ச், மசாலா மற்றும் நறுமண பவுடர்கள் இருக்கும்.

பட்டனை கிளிக் செய்தால் போதும், 3டி பிரின்டர் முதலில் மாவை தண்ணீரில் கலக்கி, கீழே பொருத்தப்பட்டுள்ள சூடான தகட்டில் ஸ்பிரே செய்யும்.

அது வெந்து கொண்டிருக்கும்போதே, தக்காளி பவுடர், எண்ணெய், ஸ்டார்ச், புரோட்டீன், மசாலா என ஒவ்வொரு பொருட்களையும் 3டி பிரின்டர் அடுக்கடுக்காக ஸ்பிரே செய்யும். 70 வினாடிகளில் சூடான பீட்சா தயாராகிவிடுமாக்கும் .

வீடியோ லிங்க்:http://www.youtube.com/watch?v=uphIwHFz0no
கைப்பேசிகளில் அழிந்த தரவுகளை மீட்க வேண்டுமா..?

கைப்பேசிகளில் உண்டாகும் வைரஸ் தாக்கங்களால் அவற்றில் சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அழிந்து போவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளன இதனால் ஏற்படும் தரவு இழப்பினை தவிர்ப்பதற்கு பேக்கப் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.

இதனையும் தாண்டி அழிவடைந்த தரவுகளை மீட்டுக்கொள்வதற்கு phoneMine எனும் மென்பொருள் உதவியாக காணப்படுகின்றது. இதன் மூலம் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றினையும் அழிந்த மின்னஞ்சல்கள், தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றினையும் மீட்கக்கூடியதாக இருக்கின்றது.

தரவிறக்கச் சுட்டி:-

hotdownloads2.com/trialware/download/Download_Amrak.PhoneMiner.Setup.v.2.3.2.msi?item=34333-4&affiliate=49466